Números 32
TAM2017 vs ARIB
1 ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
1 Ora, os filhos de Rúben e os filhos de Gade tinham gado em grande quantidade; e quando viram a terra de Jazer, e a terra de Gileade, e que a região era própria para o gado,
2 ஆகையால் ரூபன் சந்ததியும் காத் சந்ததியும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
2 vieram os filhos de Gade e os filhos de Rúben a Moisés e a Eleazar, o sacerdote, e aos príncipes da congregação e falaram-lhes, dizendo:
3 “யெகோவா இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறியடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
3 Atarote, Dibom, Jazer, Ninra, Hesbom, Eleale, Sebã, Nebo e Beom,
4 உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.
4 a terra que o Senhor feriu diante da congregação de Israel, é terra para gado, e os teus servos têm gado.
5 “உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும்” என்றார்கள்.
5 Disseram mais: Se temos achado graça aos teus olhos, dê-se esta terra em possessão aos teus servos, e não nos faças passar o Jordão.
6 அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
6 Moisés, porém, respondeu aos filhos de Gade e aos filhos de Rúben: Irão vossos irmãos à peleja, e ficareis vós sentados aqui?
7 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?
7 Por que, pois, desanimais o coração dos filhos de Israel, para eles não passarem à terra que o Senhor lhes deu?
8 அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
8 Assim fizeram vossos pais, quando os mandei de Cades-Barnéia a ver a terra.
9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் யெகோவா தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
9 Pois, tendo eles subido até o vale de Escol, e visto a terra, desanimaram o coração dos filhos de Israel, para que não entrassem na terra que o Senhor lhes dera.
10 அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
10 Então a ira do Senhor se acendeu naquele mesmo dia, e ele jurou, dizendo:
11 உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,
11 De certo os homens que subiram do Egito, de vinte anos para cima, não verão a terra que prometi com juramento a Abraão, a Isaque, e a Jacó! porquanto não perseveraram em seguir-me;
12 எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
12 exceto Calebe, filho de Jefoné o quenezeu, e Josué, filho de Num, porquanto perseveraram em seguir ao Senhor.
13 அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.
13 Assim se acendeu a ira do Senhor contra Israel, e ele os fez andar errantes no deserto quarenta anos, até que se consumiu toda aquela geração que fizera mal aos olhos do Senhor.
14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.
14 E eis que vós, uma geração de homens pecadores, vos levantastes em lugar de vossos pais, para ainda mais aumentardes o furor da ira do Senhor contra Israel.
15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.
15 se vós vos virardes de segui-lo, também ele tornará a deixá-los no deserto; assim destruireis a todo este povo:
16 அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: “எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
16 Então chegaram-se a ele, e disseram: Construiremos aqui currais para o nosso gado, e cidades para os nossos pequeninos;
17 நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
17 nós, porém, nos armaremos, apressando-nos adiante dos filhos de Israel, até os levarmos ao seu lugar; e ficarão os nossos pequeninos nas cidades fortificadas, por causa dos habitantes da terra.
18 இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
18 Não voltaremos para nossas casas até que os filhos de Israel estejam de posse, cada um, da sua herança.
19 யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடு யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம்” என்றார்கள்.
19 Porque não herdaremos com eles além do Jordão, nem mais adiante; visto que já possuímos a nossa herança aquém do Jordão, ao oriente.
20 அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,
20 Então lhes respondeu Moisés: se isto fizerdes, se vos armardes para a guerra perante o Senhor,
21 யெகோவா தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,
21 e cada um de vós, armado, passar o Jordão perante o Senhor, até que ele haja lançado fora os seus inimigos de diante dele,
22 அந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, யெகோவாவுக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்குச் சொந்தமாகும்.
22 e a terra esteja subjugada perante o senhor, então, sim, voltareis e sereis inculpáveis perante o Senhor e perante Israel; e esta terra vos será por possessão perante o Senhor.
23 நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.
23 Mas se não fizerdes assim, estareis pecando contra o Senhor; e estai certos de que o vosso pecado vos há de atingir.
24 உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள்” என்றான்.
24 Edificai cidades para os vossos pequeninos, e currais para as vossas ovelhas; e cumpri o que saiu da vossa boca.
25 அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
25 Então os filhos de Gade e os filhos de Rúben disseram a Moisés: Como ordena meu senhor, assim farão teus servos.
26 எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
26 Os nossos pequeninos, as nossas mulheres, os nossos rebanhos e todo o nosso gado ficarão nas cidades de Gileade;
27 உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம்” என்றார்கள்.
27 mas os teus servos passarão, cada um que está armado para a guerra, a pelejar perante o Senhor, como diz o meu senhor.
28 அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
28 Então Moisés deu ordem acerca deles a Eleazar, o sacerdote, e a Josué, filho de Num, e aos cabeças das casas paternas nas tribos dos filhos de Israel;
29 “காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்த தேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
29 e disse-lhes Moisés: Se os filhos de Gade e os filhos de Rúben passarem convosco o Jordão, armado cada um para a guerra perante o Senhor, e a terra for subjugada diante de vós, então lhes dareis a terra de Gileade por possessão;
30 உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும்” என்றான்.
30 se, porém, não passarem armados convosco, terão possessões entre vós na terra de Canaã.
31 காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
31 Ao que responderam os filhos de Gade e os filhos de Rúben: Como o senhor disse a teus servos, assim faremos.
32 யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.
32 Nós passaremos armados perante o senhor para a terra de Canaã, e teremos a possessão de nossa herança aquém do Jordão.
33 அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
33 Assim deu Moisés aos filhos de Gade e aos filhos de Rúben, e à meia tribo de Manassés, filho de José, o reino de Siom, rei dos amorreus, e o reino de Ogue, rei de Basã, a terra com as suas cidades e os respectivos territórios ao redor.
34 பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
34 Os filhos de Gade, pois, edificaram a Dibom, Atarote, Aroer,
35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
35 Atarote-Sofã, Jazer, Jogbeá,
36 பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
36 Bete-Ninra e Bete-Harã, cidades fortificadas; e construíram currais de ovelhas.
37 ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
37 E os filhos de Rúben edificaram a Hesbom, Eleale e Quiriataim;
38 பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.
38 e Nebo e Baal-Meom {mudando-lhes os nomes}, e Sibma; e deram outros nomes às cidades que edificaram.
39 மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
39 E os filhos de Maquir, filho de Manassés, foram a Gileade e a tomaram, e desapossaram aos amorreus que aí estavam.
40 அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
40 Deu, pois, Moisés a terra de Gileade a Maquir, filho de Manassés, o qual habitou nela.
41 மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.
41 E foi Jair, filho de Manassés, e tomou as aldeias dela, e chamou-lhes Havote-Jair.
42 நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.
42 Também foi Nobá, e tomou a Quenate com as suas aldeias; e chamou-lhe Nobá, segundo o seu próprio nome.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?