1 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
7 சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.